இன்று சர்வதேச யோகா தினம்: தமிழிசையுடன் செங்கோட்டையன் யோகா பயிற்சி

சென்னை:

ன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு யோகாக  செய்தனர்.

உலகம் முழுவதும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம்  ஜூன் 21-ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை நந்தனம் ஒய்எம்சியி மைதானத்தில்  நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையான், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்பட கொண்டனர். மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

யோகா பயிற்சி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்  பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மதம் – மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய அமைச்சர், கவனச்சிதறல் இன்றி கல்வி கற்க மாணவர்களுக்கு யோகா உதவுகிறது . யோகா கற்றுத்தர 13 ஆயிரம் பயிற்சியாளர்கள் தயாராக உள்ளதால் விரைவில் நிதி ஒதுக்கி செயல்படுத்தப்படும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.