புதுச்சேரியின் விடுதலை நாள் இன்று!

புதுச்சேரி,

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 63வது விடுதலை நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் இன்று காலை  நடைபெற்‌‌ற நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

ஆங்கிலேயர்கள்  கட்டுப்பாட்டில் இருந்து இந்தியாவிற்கு 1947 ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் பிரெஞ்சுக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்த  புதுச்சேரிக்கு அப்போது சுதந்திரம் கிடைக்கவில்லை.

பல்வேறு பகுதிகளாக பிரிந்திருந்த இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்து வந்தாலும், பிரெஞ்சு – பிரிட்டிஷார் இடையே செய்துகொண்ட உடன்படிக்கை மூலம் சில பகுதிகள் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. அதில்  புதுச்சேரியும் அடங்கும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு பிறகு 1954 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து புதுச்சேரிக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்த நாளை  புதுச்சேரி அரசு விடுதலை நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசியதாவது, ஆங்கிலேயர்கள் ஆதிக்க சக்தியாக இந்தியாவில் வளர்ந்த நிலையில் பிரெஞ்சுக்காரர்களும் பல்வேறு பகுதிகளில் தங்கள் ஆதிகத்தை நிலை நிறுத்த முனைந்தனர். தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம், வங்காளத்தில் சந்திரநாகூர் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தினர். 1950ம் ஆண்டு சந்திரநாகூர் மேற்கு வங்கத்துடன் இணைந்து விட்டது.

ஆனால் நாம் வீரம் செறிந்த போராட்டத்தின் மூலமாக 1954 நவம்பர் 1ம் தேதி விடுதலை பெற்றோம். இந்த வரலாற்று நிகழ்வை கொண்டாடும் வகையில் பிரெஞ்சுக்காரர்கள் எந்த இடத்தில் கப்பல் ஏறிச் சென்றார்களோ அதே இடத்தில் நமது தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளோம்.

புதுவையில் நடந்த பிரெஞ்சு ஆட்சியை எதிர்த்து அரசியல் தலைவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், என அனைத்து தரப்பு மக்களும் பல காலகட்டங்களில் போராட்டம் நடத்தினர்.

காந்தியடிகளும், நேருவும் புதுவைக்கு வந்து மக்களிடையே விடுதலை வேட்கையை தூண்டினர். மக்கள் தாமாகவே முன்வந்து பிரெஞ்சு ஆட்சியை எதிர்த்து போராடினர்.

முதலில் ஏனாமிலும், பின்னர் மாஹேயிலும் மக்கள் போராட்டத்தால் பிரெஞ்சு நிர்வாகிகள் வெளியேறினர். புதுவை, காரைக்காலில் பின்னர் வெடித்த போராட்டங்களால் கீழூரில் பிரதிநிதிகள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பிரெஞ்சிந்திய பகுதி இந்தியாவோடு இணைவது உறுதி செய்யப்பட்டது. 1954 நவம்பர் 1}ம் தேதி புதுவை சுதந்திர பூமியானது.

ஆளுநர் மாளிகையில் பிரெஞ்சு கொடி இறக்கப்பட்டு இந்திய கொடி ஏற்றப்பட்டது. சுமார் 300 ஆண்டுகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாம் நிறைய இழந்திருக்கிறோம். அவர்கள் ஆதிக்க சக்தியாக இருந்தாலும், அவர்களிடம் பல்வேறு அனுபவங்களை பெற்றோம். இந்தியாவின் கீழ் புதுவை பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது. குறிப்பாக மதச்சார்பற்ற ஆட்சி மத்திய, மாநிலத்தில் இருந்த போது இவை நிகழ்ந்தன.

காங்கிரஸ் அரசு மேற்கொண்ட பணிகளால் புதுவை கல்விக்கேந்திரமாக திகழ்கிறது.

உயர்கல்வியில் நாட்டிலேயே 5-வது இடத்தை பெற்றுள்ளோம். 2017-18ல் 1180 இளநிலை, முதுநிலை சேர்க்கை இடங்கள், அரசு மற்றும் கூட்டுறவு சங்க கலைக்கல்லூரிகளில் உருவாக்கப்பட்டு மாணவர்கள் பயில வகை செய்யப்பட்டது. குறிப்பாக பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் 566 கூடுதல் இடங்களுடன் ஷிப்ட் பாட முறை அறிமுகம் செய்யப்பட்டது.

பெங்களூர் சத்தியசாய் அறக்கட்டளைஉதவியோடு 20000 ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு சூடான பால், பிஸ்கெட் தரப்படுகிறது. இது பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

மேலும் அட்சய பாத்திராஅமைப்பின் உதவியோடு மதிய உணவுத் திட்டம் மெருகேற்றி செயல்படுத்தப்படும்.

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெற்றோர், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சுகாதாரச் சேவையில் நாம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளோம். குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்ததில் 2-ம் இடத்தை பெற்றுள்ளோம்.

புதுவையில் 99.98 சதவீதம் மகப்பேறு மருத்துவமனைகளிலேயே நடக்கிறது.

சுற்றுலாவிலும் நாம் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளோம். ஆன்மீக சுற்றுலா திட்டத்தின் கீழ் ரூ.107 கோடியை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வாரம் முழுமைக்குமான சுற்றுலா தலமாக புதுவையை மாற்றவும், மாஹே, ஏனாம், காரைக்காலிலும் சுற்றுலாவை மேம்படுத்த கருத்துரு மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.

புதுவை நகரம் இன்றும் தனது பாரம்பரியம், வரலாற்றுச் சின்னங்களை காத்து வருகிறது. பொலிவு நகர திட்டத்தின் கீழ் புதுவையின் பழமை மாறாமல் அதன் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

மேலும் அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சி ஏற்பட அரசு பாடுபடுகிறது.

நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும், மாநில வளர்ச்சியை முடக்குவதிலும் எத்தகைய இடையூறுகள் வந்தாலும், அவைகளை எதிர்கொண்டு அனைவரது நலனைப் பேணிக் காப்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. இது மக்களுக்கான அரசு என்பதை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிருபீத்து காட்டி இருக்கிறோம்

சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதின் மூலம் 13 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளன என்றார் நாராயணசாமி.

சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், அமைச்சர்ஷாஜஹான், பேரவை துணைத்தலைவர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏக்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், பாலன், தில்லி பிரதிநிதி ஜான்குமார், தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா, டிஜிபி கெளதம், மற்றும் அரசு செயலர்கள், அதிகாரிகள், கலந்து கொண்டனர்.

280 ஆண்டுகள் பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி 1954 ஆம் ஆண்டு விடுதலை பெற்று இந்திய ஆட்சியப்பரப்போடு இணைந்தது.

விடுதலை தினமான இன்று புதுச்சேரி மாநிலத்திற்கு இன்று அரசு பொது விடுமுறை நாளாகும்.

இந்திய இறையாண்மையின்கீழ் புதுச்சேரி மாநிலம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்து இருக்கிறது…

புதுச்சேரி மாநிலம் கல்வியில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது.

தென்னிந்திய அளவில் புதுச்சேரி ஒரு கல்விக் கேந்திரமாக மாறியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் உயர்கல்வி படிப்பில் அகில இந்திய அளவில் 5வது இடத்தை பிடித்துள்ளது பெருமை சேர்க்கும் ஒன்றாகும்- விடுதலை நாள் விழாவில் முதல்வர் உரை…

சுகாதாரச் சேவையில் புதுச்சேரி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

நாட்டிலேயே குழந்தை இறப்பு விகிதத்தைக் குறத்ததில் புதுச்சேரி மாநிலம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தி அரசுத்துறைகளின் கூட்டு முயற்சிகளின் மூலம் நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுச்சேரி விடுதலை நாளையொட்டி தேசியக்கொடி ஏற்றிவைத்த முதல்வர் நாராயணசாமி உரை கிழக்கிந்திய பிரான்சின் ஆற்றுப்படுகை என்று வர்ணிக்கப்படும் புதுச்சேரி நகரம் தனது பாரம்பரியத்தையும் பழமைய வாய்ந்த புராதன வரலாற்று சின்னங்களை பாதுகாக்க ரூ.107 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்ததில் நாட்டிலே புதுச்சேரி மாநிலம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

டெங்கு காய்ச்சல் பரவுதை எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருகின்றனர்.

புதுசேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் மூலம் குற்றங்கள் நடைபெறுவது 13 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர்  நாராயணசாமி பேசினார்.

அதேபோல் இன்று தமிழகத்தில் சேலம் நகரம் உருவாகிய 150வது ஆண்டு தினமும் கொண்டாடப்படுகிறது.

https://patrikai.com/150th-anniversary-of-salem-started-today/