ராஜிவ் காந்தி பிறந்த தினம் : நினைவிடத்தில் சோனியா, ராகுல் மலர் அஞ்சலி

டில்லி

ன்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாளை ஒட்டி அவர் நினைவிடத்தில் சோனியா காந்தி,  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான ராஜிவ் காந்தி கடந்த 1944 ஆம் ஆண்டு ஆகஸ் மாதம் 20 ஆம் தேதி பிறந்தார்.   அவரது தாயார் இந்திரா காந்தி மறைவுக்குப் பின் பிரதமாரான அவர் 1991 ஆம் வருடம் மே மாதம் 21 ஆம் தேதி அன்று மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.    இந்திய அரசின் பாரத ரத்னா விருதைப் பெற்ற ராஜிவ் காந்தி இந்தியாவில் கம்ப்யூட்டர் உபயோகத்தை ஊக்குவித்தவர் ஆவார்.

ராஜிவ் காந்தியின் நினைவிடம் டில்லியில் அமைந்துள்ளது.   இன்று அவருடைய  பிறந்த தினத்தை முன்னிட்டு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அவர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

அந்த நிகழ்வில் அவர்களுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.  அனைவரும் மறைந்த ராஜிவ் காந்திக்கு அவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.