தஞ்சை விவசாயிகள் இன்று 3வது நாளாக போராட்டம்!

தஞ்சாவூர்,

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3வது நாளாக தஞ்சை மாவட்ட விவசாயிகள், தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, காவிரி தீர்ப்பாயத்தை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக  வந்த தகவலை தொடர்ந்து, தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதன் காரணமாக,  காவிரி தீர்ப்பாயத்தை ரத்து செய்யக்கூடாது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பையும் ரத்து செய்யக் கூடாது, கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை உடனே தடுக்க வேண்டும், வறட்சி நிவாரணத்தை முறையாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

போராடும் விவசாயிகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் நேற்று சந்தித்து போராட்டத்தை கைவிட கோரினார்.

ஆனால், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என்று கூறி உள்ளனர்.