4வது நாள்: இன்றும் மேலும் புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிர்மலா சீத்தாராமன்…

--
டெல்லி:
த்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று 4வது நாளாக மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார திட்டங்கள்  குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடந்த  கடந்த 13ந்தேதி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
ஏற்கனவே 3 நாள்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், இன்று 4வது நாளாக மீண்டும் இன்று மால 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அப்போது  மேலும்  பல்வேறு சலுகைகளை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.