இன்று மங்கள் பாண்டே பிறந்த தினம்

ங்கள் பாண்டே என்னும் சுதந்திரப் போராட்ட வீரனின் பிறந்த தினத்தில் அவனை நினைவு கூர்வோம்.

ங்கள் பாண்டே 1827ஆம் வருடம் ஜூலை 19ல் தற்போதைய உத்திரப் பிரதேச மாநிலத்தில் நாக்வா என்னும் கிராமத்தில் பிறந்தார்.

அவர் 34ஆம் பெங்கால் நேடிவ் இன்ஃபெண்டிரி என்னும் ராணுவப் பிரிவில் பணிபுரிந்தார்.  அந்த ராணுவம் அப்போதைய ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு சொந்தமானது.

ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட என்ஃபீல்ட் பி 53 என்னும் துப்பாக்கியில் பன்றி மட்டும் மாட்டு இறைச்சி பூசப்பட்டு இருந்தது தெரிந்து அதை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் மங்கள் பாண்டே.

1857ஆம் வருடம் நடந்த அந்த எதிர்ப்பே முதலாம் சுதந்திரப் போர் ஆனது.  ஆங்கிலேயரை எதிர்த்து போராட ஆரம்பித்தார் மங்கள் பாண்டே. அவர் போராட்டத்துக்கு தலைமை தாங்கி பல ஆங்கிலேயர்களை கொன்று குவித்துள்ளார்.

ஆங்கிலேயர்கள் பாண்டே என்றால் துரோகி என அகராதிகளில் மாற்றிய கொடூரமும் நடந்துள்ளது.

மங்கள் பாண்டே – தி ரைசிங் இந்திப்படத்தில் ஒரு காட்சி

ஆங்கிலேயர்களால் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு தனது 29ஆம் வயதில்  மரணம் அடைந்தார் பாண்டே.  அவர் மரணம் அடைந்த தினம் 1857ஆம் வருடம் ஏப்ரல் 8ஆம் தேதி ஆகும்.

அவரது நினவாக 1984ல் தபால்தலை வெளியிட்டு இந்திய அரசு அவரை கவுரவித்தது.

அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு மங்கள் பாண்டே – தி ரைசிங் என்னும் பெயரில் ஒரு இந்தித்திரைப்படம் 2005ஆம் வருடம்  வெளியானது.   இதில் அமீர்கான், ராணி முகர்ஜி, அமிஷா படேல் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்தப் படத்தை கிளாப் அடித்து ஆரம்பித்து வைத்தவர் பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.