சென்னை,

மிழக முதல்வர் இறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அவருடைய முதலாண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அணுசரிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜெ. சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, உறுதிமொழி யேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மறைந்த ஜெயலலிதா மறைந்து ஓராண்டு நிறைவுபெறுவதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கு ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு உடல்நலமில்லாமல் சுமார் 70 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ந்தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா ஒரு பார்வை….

ஜெ. ஜெயலலிதா என்று அறியப்பட்ட கோமளவல்லி ஜெயராம் 1948ம் ஆண்டு பிப்ரவரி24ந்தேதி பிறந்தார். சிறுவயதிலேயே தனது தாயாரால் திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர், பின்னர் எம்.ஜி.ஆருடன் இணைந்து திரையுலகில் சிலகாலம் வலம் வந்தார். பின்னர் எம்.ஜி.ஆரால் அதிமுகவுக்கு அழைத்துவரப்பட்டார்.

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவில் அசைக்க முடியாத தலைவராக திகழ்ந்தார். தமிழக அரசியல் வரலாற்றில் தனது தனித்திறமையால் ஆட்சியை பிடித்து,  தமிழக முதலமைச்ச எராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார்.

முதன்முறையாக  1991 முதல் 1996 வரையும், 2001 ம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார்.

2015 மே 23 முதல் இறக்கும் வரையில் ( டிசம்பர், 5,  2016) முதலமைச்சராகப் பணி புரிந்தார்.

ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகவும்  1989 முதல் 1991வரை பணியாற்றியிருக்கிறார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை “புரட்சித் தலைவி” எனவும் “அம்மா” எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்து வருகின்றனர்.

இவர் 120 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.