2019ம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி….

டில்லி:

ருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த 30ந்தேதியுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில், கஜா புயல் பாதிப்பு காரணமாக, விண்ணப்பத்திற்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம்  நீட்டித்து  உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி 7ந்தேதி வரை கால அவகாசம் நீட்டித்து தேசிய தேர்வு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், இன்றுடன் விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைகிறது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க இயலும்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி  நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம்  கடந்த அக்டோபர் மாதம் 1ந்தேதி முதல் 30ந்தேதி வரை நடைபெற்று வந்தது. இதற்கிடையில் கஜா புயல் காரணமாக மேலும் அவகாசம் கோரி உச்ச நீதி மன்றத்தில் முறையிடப்பட்டதால், மேலும் ஒரு வாரம் காலஅவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்றுடன் அதற்கான கால அவகாசம் முடிவடைகிறது.

தமிழகத்தில் 2019ம் ஆண்டு நீட் தேர்வை எழுதும் வகையில், 26,000 மாணவா்கள் விண்ணப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed