தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்றே கடைசி

சென்னை:

மிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்றுடன் முடிவடைகிறது. இன்றே கடைசி நாளாகும்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 11ந்தேதி முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன.

மேலும், தமிழக அரசின் சுகாதாரத்துறை இணையதளங்களான  www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற தளத்திலும் விண்ணபங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம் என்றும்  மருத்துவக் கல்வி இயக்ககம் கூறியிருந்தது.

இந்த நிலையில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஏற்கனவே அறிவித்தபடி  இன்றுடன் முடிவடைகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளை மாலை 5 மணிக்கு முன்னதாக குறிப்பிட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

மிழகத்தில் உள்ள  23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3050 எம்.பி.பி.எஸ் மருத்துவ  படிப்புகளுக்கான இடங்கள்  உள்ளன. அவற்றில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய அளவிலான மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு விடும். அதபோக, 2, 594 இடங்கள் உள்ளது. இந்த இடங்களுக்கான  கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

மேலும், பல் மருத்துவ படிப்பான பிடிஎஸ், படிப்புக்கும்,  சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி,  சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீடாக 30 இடங்கள்  போக, மீதம் உள்ள 170 இடங்களுக்கான கலந்தாய்வும் எம்.பி.பி.எஸ் கலந்தாய்வுடன்  நடைபெற உள்ளது.

விண்ணப்பம் விநியோகம் இன்றுடன் முடிவடைந்து,  வரும், 28-ம் தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து  ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வு தொடங்குகிறது.

ஏற்கனவே மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய அளவிலான நீட் தேர்வு முடிவுகள்படி இந்த மாதம் கவுன்சிலிங் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்டு  24ந்தேதி தொடங்கி நடைபெற்ற  நடைபெற்ற மருத்துவ படிப்பிற்கான கவுன் சிலிங்கில்,  முதல் நாள் சிறப்பு பிரிவினருக்கான 14 இடங்களும் நிரம்பிய நிரம்பிய நிலையில், 2வது நாள் முதல் பொதுப்பிரிவுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அன்று, 1,029 இடங்களும், 3வது நாளில்1,260 இடங்களும் நிரம்பின. மூன்று நாட்களில், அரசு, சுய நிதி கல்லுாரிகளில் உள்ள, 80 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பிய நிலையில், 4வது  நாள் கவுன்சிலிங்கில்,1,596 பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் மதியத்திற்குள் அனைத்து இடங்களும் நிரப்பியது குறிப்பிடத்தக்கது.