விஏஓ உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!:

சென்னை:

விஏஓ உள்ளிட்ட 9351 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தற்போது பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணப்ப படிவங்கள் கிடைக்கின்றன.  இந்த இணையதள்த்தில் பலரும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 19.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

இணையதளம் மூலம் விண்ண்பிக்க இன்றே கடைசி நாள்.  தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையம் முடங்கி விண்ணப்பிக்க முடியாமல் போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பாக முடியாது என்று  ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த விண்ணப்பத்திற்கான கட்டணத்தை டிசம்பர் 21ம் தேதி வரை செலுத்திக் கொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்து இருக்கிறது.