உலக உணவு பாதுகாப்பு நாள் – 07/06/2020

டில்லி

ன்று (07/08/2020) உலக உணவு பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது

உலகில் உணவு சுகாதாரக் குறைபாட்டால் பல நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர்.  தற்போது உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகமாக உள்ளதால் மக்கள் உணவு சுகாதாரத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வாருகின்றனர்.   குறிப்பாக உணவு விடுதிகளுக்குச் செல்வது,  வெளி உணவுகளை சாப்பிடுவது போன்றவை பெருமளவில் குறைந்துள்ளது.

உலக சுகாதார மையம் வீட்டில் சமைக்கும் உணவுகளைச் சாப்பிடுவதை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.  மேலும் பாதுகாப்பற்ற உணவால் 200 வகை நோய்கள் உண்டாகலாம் எனவும் 10க்கு ஒருவர் இவ்வாறு பாதிக்கப்படுவதாகவும் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  வருடத்துக்கு இவ்வாறு சுமார் 4.2 லட்சம் பேர் மரணம் அடைவதாக அறிவித்துள்ள மையம் உணவு பாதுகாப்புக்காக ஐந்து முக்கிய விதிகளை அறிவித்துள்ளது.

அவை பின் வருமாறு

  1. சுத்தமாக இருக்கவும் :  சமையலறைக்குள் நுழையும் முன்னர் கைகளை மற்றும் பாத்திரங்களை கழுவதல் போன்ற நடவடிக்கைகள் மற்றும் சமையல் செய்யும் போது முழு சுத்தத்தை கடைப்பிடித்தல் அவசியமாகும்.
  2. சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளைப் பிரித்து வைக்கவும் : தனித் தனி பாத்திரங்களில் சமைத்த மற்றும் சமைக்காத பொருட்களை வெவ்வேறு இடங்களில் பிரித்து வைக்கவும்.  இதனால் ஒன்றுக்கொன்று கலப்பதைத் தவிர்க்க  முடியும்.
  3. முழுமையாக வேக வைக்கவும் : உணவுப் பொருட்களை முழுமையாக வேக வைப்பதன் மூலம் அதில் உள்ள கிருமிகள் அழிவதோடு மட்டுமின்றி சத்துக்களும் சரிவரக் கிடைக்கும்.
  4. உணவுப் பொருட்களைச் சரியான வெப்ப நிலையில் வைக்கவும் : ஒவ்வொரு உணவுப் பொருளையும் தனித் தனி இடத்தில் மட்டுமின்றி தனித்தனி வெப்பநிலையிலும் வைக்க வேண்டும்.   ஒரு சில பொருட்கள் கெட்டு விடும் என்பதால் குளிர்ந்த நிலையில் அவசியம் வைக்க வேண்டும்
  5. பாதுகாப்பான நீர் மற்றும் பொருட்களால் சமைக்கவும் : சமையல் செய்யும் போது கெட்டுப்போகாத பொருட்கள் மற்றும் பாதுகாப்பான நீர் மிகவும் அவசியமாகும். அப்படிப்பட்டவற்றால் மட்டுமே சமையல் செய்ய வேண்டும்.