இன்று மழை பெய்யும்! வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு!!

சென்னை,

சென்னையில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழக முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தமிகத்தில் நேற்று இரவு முதல் மிதனமான மழை அவ்வப்போது பெய்து வருகிறது. கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் கடற்கரை பகுதிகிளில் நேற்று முதல்  மிதமான அளவு மழைபெய்து வருகிறது.

சென்னையில் நேற்று இரவு மிதமான ம பெய்தது. தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சையில் கனமழை பெய்யும்.

மேலும் மன்னார் வளைகுடா முதல் வட தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை பரவி உள்ளது என்று கூறியுள்ளார்.

காற்றழுத்த தாழ்வுநிலை தற்போதும் நீடித்துவருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மற்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.