இன்று: காஷ்மீர் ராணுவ முகாம்மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டு கொலை!

லாங்கடே:

லாங்கடே ராணுவ முகாமை இன்று அதிகாரை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இரண்டு ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.

militaryu
ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாரா மாவட்டத்தில் உள்ள  லாங்காடே ராணுவ முகாமை குறி வைத்து பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் இன்று அதிகாரை திடீர்  தாக்குதல் நடத்தினர்.

ஹன்ந்வாராவில் 30 வது ராஷ்டிரீய ரைபிள்ஸ் முகாமில் உள்ள பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள்  இந்த துப்பாக்கி சூடை நடத்தினர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இன்று காலை 6.30 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றது.   ராணுவ முகாமிற்கு வெளியே கிட்டதட்ட 15 நிமிடங்கள் துப்பாக்கி சூடு  நடந்தது.

இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் உடனடி பதில் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதில்  இரண்டு பயங்பகரவாதிகள் கொல்லப்பட்டனர்.

 

 

கார்ட்டூன் கேலரி