download

அகிலன் பிறந்தநாள் (1922)
அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் தமிழின் முக்கிய எழுத்தாளராவார்.  புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எனஅறு பலவிதங்களில் தமிழிக்கு தனது பங்களிப்பை அளித்துள்ளார்.
தனது சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார். வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கானசாகித்ய அகாதமி விருது பெற்றார்.
அகிலனுடைய பெரும்பாலான படைப்புகள் இந்திய மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டதோடு,  சீனம், மலாய், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழி போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
‘பாவை விளக்கு’ திரைப்படமாக எடுக்கப்பட்டது. இவரது ‘கயல் விழி’ என்னும் புதினம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது.
ஜனவரி 31, 1988 அன்று அகிலன் மறைந்தார்.