இன்று: ஜூன் 28

நரசிம்மராவ் பிறந்தநாள் (1921)

பி. வி. நரசிம்ம ராவ்  இந்தியாவின் ஒன்பதாவது பிரதமர்.  தென் இந்தியாவைச் சேர்ந்த முதல்  பிரதமர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.   இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். பிறகு  இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்தார்.

PVNR laughing

 

1991இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ராவ் பிரதமரானார். ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார்.

டிசம்பர் 2004இல், தனது 83ஆம் வயதில் மறைந்தார்.

You may have missed