a
எஸ்.பி. பாலசுப்ரமணியம் பிறந்தநாள் (1946)
ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம்  என்கிற  எஸ்.பி. பாலசுப்ரமணியம் பிரபல திரைப்பட பாடகர்.   ஆந்திர மாநிலம்  நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர்.
1966ம் ஆண்டு ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் முதன் முதலாக பாடினார். இன்றுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது.
 2
எஸ்பொ. பிறந்தநாள் (1932)
என அறியப்படும் ச. பொன்னுத்துரை   ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின்சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.
 
.