936247_267596543384563_1875779369_n
 
“பாம்பு இளைப்பாற புற்று
பருந்து இளைப்பாற கூடு
கண் இளைப்பாற தூக்கம்
கழுதை இளைப்பாற துறை…
பறவைகளும் மற்ற விலங்கினங்களும்
இளைப்பாறிட இடம் உண்டு
– எங்களுக்கு…?”
– காலத்தால் மறக்கடிக்கப்பட்ட – கவிஞர் கண்ணதாசனுக்கு முன்னோடியான – கவிஞர் கம்பதாசனின் வரிகள் இது!
பொதுவுடணை சித்தாந்தத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்ட சிறந்த கவிஞரான இவர், திரைப்பாடல்களிலும் சிறந்த கருத்துக்களைப் புகுத்தியவர்.
எப்படி வாழ வேண்டும் என்பதைப்போலவே, எப்படி வாழக்கூடாது என்பதற்கும் உதாரணமாய் விங்கியவர்.
அறிவு, திறமை, உழைப்பு, நேர்மை…இருந்தாலும் குடிப் பழக்கம் ஒன்றே போதும்.. ஒரு மனிதனை வீழ்த்த என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.
இன்று அவர் பிறந்தநாள்.