இன்று: மே 21
எம்.என். நம்பியார் பிறந்தநாள்
மாஞ்சேரி நாராயணன் நம்பியார் என்கிற என். நம்பியார், 1919ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். தமிழ்த் திரையுலகில் பழம்பெரும் நடிகரான இவர், சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் ஜொலித்தார்.
மிக புகழ் பெற்ற நட்சத்திரங்களான எம்ஜிஆர், சிவாஜி கணேசன் இருவரின் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றவர்
எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர். ரஜினிகாந்த்தின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். நம்பியார்
விஜய்காந்தின் சுதேசி படத்தில்லேயே கடைசியாக நடித்த நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர்
உடல் நலக்குறைவால் 2008, நவம்பர் 19 அன்று காலமானார்.
ராஜீவ்காந்தி நினைவுநாள்
நேரு குடும்பத்தில் உதித்த புகழ்பெற்ற அரசியல் தலைவர். 1944ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி பிறந்த ராஜீவ், அரசியலில் நாட்டமின்றியே இருந்தார். விமான பைலட் ஆக பணி புரிந்தார்.
இவரது தாயார் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் பிறகு அரசியலுக்கு வந்தார். நாட்டின் பிரதமர் ஆனார். இவர் பிரதமராக இருந்த காலத்தில்தான் நாட்டில் கணினி பரவலாக பயன்படுத்தப்பட ஆரம்பித்தது. நாட்டினை நவீன முன்னேற்றத்துக்கு அழைத்துச் சென்றவர் என்று போற்றப்படுகிறார்.
இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார் ராஜீவ்காந்தி.
21 மே 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.