சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று மேலும் 4 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

சென்னை:

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று இரவு முதல் இன்று முற்பகலுக்குள் மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சுகாதாரத்துறை நேற்று மாலை அறிவித்துள்ளபடி, புதிதாக  817 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  மொத்த பாதிப்பு எண்ணிக்கை  18,545 ஆக  உயர்ந்துள்ளது.

நேற்று 6 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்ந்திருந்தது.

இந்த நிலையில், நேற்றிரவு முதல் காலை வரை 4 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.