காலையில் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஜாமினில் விடுதலை

ஸ்ரீலங்கா:

லங்கை முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் உடடினயாக  ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன், கடந்த ஜூலை மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார. அப்போது,

யாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனை மேற்கோள் காட்டி  பேசியபோது, “2009-ம் ஆண்டுக்கு முன்னர் நாம் எப்படி இருந்தோம். நாம் தலைநிமிர்ந்து வாழ, தெருவில் சுதந்திரமாக நடமாட, நமது குழந்தைகள் பத்திரமாக பள்ளி சென்று வர தற்போது உள்ள சூழலில் விடுதலை புலிகள் மீண்டும் வந்தால் மட்டுமே சாத்தியம்” என கூறினார்.

அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இலங்கை அரசியல் கட்சிகள், அவரை கைது செய்ய வேண்டும் என்றும், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கின. இது  அரசியலைமைப்பை மீறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிரணி ஆகியன விஜயகலா மகேஸ்வரனின் அமைச்சர் பதவியை பறிக்குமாறு வலியுறுத்தியிருந்த நிலையில் அவர் தனது அமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார்.

இந்த நிலையில், சர்ச்சைக்குறிய கருத்து குறித்து விசாரணைக்கு அழத்த காவல்துறை, அவரை கைது செய்வதாக அறிவித்து நீதிமன்றத்தில் நிறுத்தியது.

நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது,  விஜயகலா யாழ்ப்பாணத்தில் பேசியது தொடர்பான விசாரணைகள் முடிவடைந்து விட்டதாக  கூறப்பட்டது. இதையடுத்து, விஜயகலா மகேஸ்வரனுக்கு ரூபாய் 5 லட்சம் சொந்த ஜாமினில் செல்ல நீதிபதி அனுமதி வழங்கினார். அதையடுத்து இந்த வழக்கு டிசம்பர் 7ந்தேதி ஒத்தி வைக்கப்பட்டது.