Random image

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பீகார் முதல்வர் அனுமதி

டில்லி

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார்.  இவருக்கு நேற்று இரவு திடீரென காய்ச்சல் மற்று மூட்டுகளில் வலியும் உண்டாகியது.   அத்துடன் கண்களிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   இன்று காலை நிதிஷ்குமார் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலை சுமார் 8.30 மணிக்கு அனுமதிக்கப்பட்ட நிதிஷ்குமாருக்கு தனி பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்காக சரியான காரணத்தையும் தற்போது அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் எய்ம்ஸ் மருத்துவமனை எவ்வித செய்தியும் அளிக்கவில்லை.