மைசூரில் இன்று தசரா ஊர்வலம் : 750 கிலோ தங்க அம்பாரியைச் சுமக்கும் யானை

மைசூர்

ன்று நடைபெறும் மைசூர் தசரா ஊர்வலத்தில் யானை 750 கிலோ தங்க அம்பாரியைச் சுமந்து செல்ல உள்ளது.

மைசூரில் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும்.    அரண்மனையில் நேற்று ஆயுத பூஜை பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டது.   அரண்மனையில் உள்ள பீரங்கிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுதங்களுக்கும் மாலை அணிவித்து பூஜை நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட யானைகள் நேற்று அரண்மனை வளாகத்தில் நடந்தது.   விஜயதசமியை முன்னிட்டு இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலம் இன்று நடைபெறுகிறது.

சுமார் 5 லட்சம் பேர் இந்த நிகழ்வைக் காண கூடுவ  வழக்கமாகும்.    இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாகக் குறைந்த அளவிலான பொதுமக்களுக்கு மட்டுமே நேரில் காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஜம்பு சவாரி ஊர்வலத்தில் ஒரு யானை சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் தங்க அம்பாரியைச் சுமந்து செல்வது சிறப்பாகும்.  இந்த தங்க அம்பாரி சுமார் 750 கிலோ எடையிலானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.