இன்று 5968 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,61,435 ஆக அதிகரிப்பு…

சென்னை:

மிழகத்தில் இன்று 5968 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,61,435  ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் தொற்று பாதிப்பில் இருந்து 5,742 குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அதேவேளையில் இன்று மட்டும் 116 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா சோதனைக்காக தற்போது 63 அரசு ஆய்வகங்கள், 76 தனியார் ஆய்வகங்கள் என 139 ஆய்வகங்கள் உள்ளன.

தற்போதைய தமிழகத்தில் கொரோனா அறிகுறி காரணமாக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 53,283.

இதுவரை சோதனைக்காக மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 39,88,599.

இன்று மட்டும்  எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 75,076.

தொற்று பாதிப்புக்குள்ளானகளின் மொத்த  எண்ணிக்கையில் ஆண்கள் 2,18,123 பேர் பெண்கள் 1,43,283 பேர் மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் .

இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,629 பேர். பெண்கள் 2,357 பேர்.

தொற்று பாதிப்பில் இருந்து, இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,742 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,01,913 பேர் .

தமிழகத்தில் கொரோனா சோதனைக்காக தற்போது 63 அரசு ஆய்வகங்கள், 76 தனியார் ஆய்வகங்கள் என 139 ஆய்வகங்கள் உள்ளன.