மழைக்கால தொடரில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

டில்லி

ரும் மழைக்கால நாடாளுமன்ற தொடரில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

நடந்து முடிந்த நாடாளுமன்ற நிதிநிலை அறிக்க தொடர் எதிர்க்கட்சிகளின் அமளிகளால் எந்த நடவடிக்கையும் இன்றி முடங்கியது.    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மழைக்கால பாராளுமன்றத் தொடர் இன்று தொடங்க உள்ளது.   அரசு தரப்பில் முத்தலாக் உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை நிறவேற்ற உள்ளதாக கூறப்படுகிறது.   அத்துடன் 18 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

இந்த கூட்டத் தொடரில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜக வுக்கு எதிராக இணைந்து செயல்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.   அதனால் நிச்சயம் கார சார விவாதங்கள் அவையில் நிகழ வாய்ப்புள்ளது.   மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் குழு தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “நேற்று முன் தினம் 13 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தினோம்.  அப்போது மோடி அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.   அதன் படி இன்று (புதன்கிழமை) இந்த தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

அத்துடன் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பசுப் பாதுகாப்புப் படையினர் நடத்தும் தாக்குதல்கள், தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்,  வன்கொடுமை சட்டத்தை தளர்த்தியது உள்ளிட்ட பலவற்றை குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க உள்ளன.

பணமதிப்பிழப்பு காலத்தில் ஐந்து நாட்களில் அகமதாபாத் வங்கியில் ரூ.750 கோடி செல்லாத நோட்டுக்கள் முதலீடு செய்யப்பட்டதை பற்றி எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்ப உள்ளன.  இது போல் அந்தக் கால கட்டத்தில் மத்திய அரசின் ஊழல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.