Random image

இன்று தமிழகத்தில் சுமார் 30 மாவட்டங்களில் ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை

சென்னை

மிழகத்தில்  இன்று சுமார் 30 மாவட்டங்களில் ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை

தமிழகத்தில் இன்று 1,428 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,84,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,733 .பேர் உயிர் இழந்து 7,62,015 பேர் குணம் அடைந்து தற்போது 10,999 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் சுமார் 30 மாவட்டங்களில் கொரோனாவால் ஒருவர் கூட மரணம் அடையவில்லை.

சென்னையில் மட்டும் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,16,119 பேர் பாதிக்கப்பட்டு 3,857 பேர் உயிர் இழந்து 2,08,678 பேர் குணம் அடைந்து தற்போது 3,584 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 49,010 பேர் பாதிக்கப்பட்டு 614 பேர் உயிர் இழந்து 47,395 பேர் குணம் அடைந்து தற்போது 1001 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 47,790 பேர் பாதிக்கப்பட்டு 717 பேர் உயிர் இழந்து 46,509 பேர் குணம் அடைந்து தற்போது 564 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

Today not even a single death in Tn because of corona

You may have missed