இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை

டில்லி

ன்று பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வந்து பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

விரைவில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  அதற்கான தேதி அறிவிப்புக்களை விரைவில் தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.  இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் பல நலத்திட்டங்களைத் தொடங்கி வருகின்றன.

அவ்வகையில் பிரதமர் மோடி இன்று தமிழகம் மற்றும் புதுவைக்கு வருகை தந்து பல திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.  அவர் காலை 7.45 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் அவர், 10.25 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்து சேருகிறார்.

அதன் பிரகு 10.30 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் 11.20 மணி அளவில் புதுச்சேரி சென்றடைகிறார். புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்த பிறகு 1.20 மணி அளவில் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 2.10 மணி அளவில் மீண்டும் சென்னை வருகிறார்.

பிறகு அவர், 2.15 மணி அளவில் விமானம் மூலம் கோவை புறப்படுகிறார்.

கோவையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், 5 மணி அளவில் கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன் பின்னர் சாலை வழியாக விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, 6 மணி அளவில் டெல்லி திரும்புகிறார்.