தமிழர் பூமியான புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த தினம் இன்று!

பிரெஞ்சு ஆதிக்கத்தின்கீழ் செயல்பட்ட வந்த புதுச்சேரி மாநிலம், இந்தியாவுடன் இணைந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆனால், புதுச்சேரி போன்ற ஒருசில யூனியன் பிரதேசங்கள்

பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து புதுவை மாநிலம் கடந்த 1962-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ந் தேதி தமிழர்கள் வாழும்  பகுதியான புதுச்சேரி முறைப்படி இந்தியாவுடன் இணைந்தது.

பிரஞ்ச்சு தேசத்திடமிருந்து விடுதலை பெற்ற பாண்டிச்சேரி ஆங்கிலேய தேசத்திடமிருந்து விடுதலை பெற்ற இந்தியாவின்கீழ் எந்தவொரு அதிகாரமும் இல்லாத , டெல்லியின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட, சாதாரண யூனியன் பிரதேசமாக இந்திய அரசியலமைப்பின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட தினம் இன்று.

அதையொட்டி இன்று புதுச்சேரியில் இணைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் மாநில முதல்வர் நாராயணசாமி, சுதந்திர போராட்ட தியாகிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Pondicherry to coincide with India, today, தமிழர் பூமியான புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த தினம் இன்று!
-=-