மோகன்லால், பிரபுதேவா உள்ளிட்ட 47 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்

டில்லி

ந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

 

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடந்தது.   அதில் கலந்துக் கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார்.   இந்த விழாவில் 47 பேருக்கு அவர் இவ்விருதுகளை வழங்கி உள்ளார்.

 

 

 

இவர்களில் பீகாரை சேர்ந்த ஹுகும்தேவ் நாராயண் யாதவ், தொழிலதிபர் ஜான் சேம்பர்ஸ், பிரபல நடிகர் மோகன்லால், அகாலிதள தலைவர் சுக்தேவ் சிங் டிந்த்ஷா, பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், உள்ளிட்டோர் பத்மபூஷன் விருது வாங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்

 

நடிகர் பிரபுதேவா, சமூக சேவகி மதுரை சின்னபிள்ளை, நடனக் கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ்,  பின்னணிப்பாடகர் சங்கர் மகாதேவன்,  கண் மருத்துவ நிபுணர் ரமணி,  டிரம்ஸ் கலைஞர் சிவமணி உள்ளிட்ட பலருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Padma awards 2019
-=-