மாங்கல்யம் காக்கும்  சாவித்திரி விரதம் இன்று!


ன்று, பெண்களின் மாங்கல்யத்தை காத்து, சகல சொபாக்கியங்களையும் அளிக்கும் சாவித்திரி விரத நாளாகும். இதை காரடையான் நோன்பு என்றும் அழைப்பார்கள்.

சாவித்திரி என்ற கற்புக்கரசி, எமனிடம்  போராடி தனது கணவனின் உயிரை மீட்டாள். அவளது பெயரில் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

இதற்கு மூலகாரணமான ஒரு புராண சம்பவம் உண்டு.

பல யுகங்களுக்கு முன்பு  அன்னை  பராசக்திக்கும் சிவபெருமானுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட…  இருவரும் பிரிந்து வாழும் சூழல் ஏற்பட்டது. இந்த  பிரிவை தாங்க முடியாத, பராசக்தி,  பூலோகத்து வந்து, விரைவிலேயே சிவனை மீண்டும் அடைய வேண்டும் என்று  கடுந்தவம் புரிந்தாள்.   முடிவில்,  சிவன் நேரில் தோன்றி, சக்தியை மீண்டும் ஏற்றுக் கொண்டார்.

ஆகவே  ;சுமங்கலிகள் இந்த விரதத்தை மேற்கொண்டாள், கணவனின் ஆயுள் அதிகரிக்கும் தம்பதி ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

மாசியும், பங்குனியும் கூடும் நேரத்தில் இந்த சாவித்திரி விரதம் வரும். இந்த நாளில் நாளில், அசைவ உணவை தவிர்க்க வேண்டும்.

அன்னை பராசக்தியை வணங்கி,  சகஸ்ர நாமம், சியாமளா தண்டகம், லலிதா நவரத்தின மாலை போன்ற மந்திரங்களை  துதிக்க வேண்டும் அன்னைக்கு  பச்சரிசி மாவில் காராமணி கலந்து வெல்லம், சேர்த்துத்  அடை செய்து  படைக்க வேண்டும்.

வீட்டில் எத்தனை சுமங்கலிகள் உள்ளார்களோ, அதற்கேற்ப, மஞ்சள் சரடுகளை  அம்மன் படத்தின் முன்  வைத்து,   அர்ச்சனை முடிந்த பிறகு   அந்த மஞ்சள் சரடை சுமங்கலிகள் தங்கள் கழுத்தில் முடிந்துகொள்ளவேண்டும்.   மணமாகாத பெண்கள், இந்த சரட்டை கையில் கட்டிக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.