தமிழகம் எங்கும் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

சென்னை

மிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் விவரங்களை திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த வருடம் ஜனவரி மாதம் 1 ஆம் தேதியை  (01/1/2018) வாக்களிக்க தகுதி ஏற்படுத்தும் நாளாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.    அந்த விதிமுறைப்படி தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  இந்த வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் www.elections.tn.gov.in என்னும் இணையதளத்தில் பார்க்க முடியும்.   அது தவிர அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியலின் நகல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 31.10.2018 வரை புதிய வாக்காளர்களை சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   அதை ஒட்டி இன்று வாக்காளர் பட்டியலில் புதியவர்களை சேர்க்கவும், விவரங்களை திருத்தம் செய்யவும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.   இன்றும் அடுத்த வாரம் ஞாயிறு அன்றும் இந்த சிறப்பு முகாம் அனைத்து வாக்கு சாவடிகளிலும் நடைபெறுகிறது.    இன்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் விண்ணப்பங்கள் பெற்று பெயர்களை சேர்க்கலாம்.

புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ரேஷன் கார்டு,  அஞ்சலக மற்றும் வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் ஆதார் கடிதம் உள்ளிட்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்று அவசியம் தேவை ஆகும்.   25 வயதுக்கு கீழுள்ளவர்கள் பிறப்பு சான்றிதழ் நகல் அல்லது பள்ளி சான்றிதழ் நகல் ஆகியவற்றை கட்டாயம் அலிக்க வேண்டும்.   அரசியல் கட்சிகள் 10 விண்ணப்பங்கள் வரை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.