இன்று: புறநகர் மின்சார சேவை மாற்றம்! ரெயில்வே அறிவிப்பு!!

சென்னை:

சென்னை புறநகர் ரெயில் சேவையில் சில மாற்றங்களை செய்து ரெயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மின்சார ரெயில் சேவையில் இன்று மட்டும் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

electric-train

காலை 9.50 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் மின்சார ரெயில் (வண்டி எண்: 42018), சூலூர்ப்பேட்டையில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் மின்சார ரெயில் (42406) கடற்கரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும்.

அதேபோல மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 10.25, 11.35 மற்றும் பிற்பகல் 12.10 மணிகளில் கும்மிடிப்பூண்டி நோக்கி புறப்படும் மின்சார ரெயில்களும் கடற்கரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும்.

இன்று முதல் அக்டோபர் 7-ந்தேதி வரையில் சூலூர்ப்பேட்டையில் இருந்து இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும் சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் மின்சார ரெயில், கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 9.45, நள்ளிரவு 2.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும்.

கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் மின்சார ரெயில், மூர்மார்க்கெட்டில் இருந்து முறையே இரவு 11.20, 12.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில்கள், மூர்மார்க்கெட்டில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்படும் மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை மின்சார ரெயில் ஆகியவை கடற்கரை ரெயில்நிலையம் வழியாக செல்லும்.

இந்த நாட்களில் ஆவடியில் இருந்து சூலூர்ப்பேட்டை, நெல்லூர் வழியாக இயக்கப்படும் ரெயில்கள் மற்றும் மறுமார்க்கமாக இயக்கப்படும் ரெயில்கள் மூர்மார்க்கெட்டில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.