புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று பதவி ஏற்பு

டில்லி

ன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பதவி ஏற்றார்.

 

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஓ பி ராவத் பொறுப்பில் இருந்தார். அவருடைய பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. ஆகவே அவர் இன்று முதல் ஓய்வு பெறுகிறார். அவருடைய பதவிக்கு புதிய தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப் பட்டுள்ளார்.

சுனில் அரோரா 1980 வருடம் ஐ ஏ எஸ் அதிகாரியாக ஆனவர். ராஜாஸ்தான் மாநிலத்தில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி ஆன இவருக்கு 62 வயது ஆகிறது. இவர் ஏற்கனவே தகவல் தொழில் நுட்பம், நிதித்துறை, ஜவுளித்துறை, திட்டக் கமிஷன் ஆகிய அமைச்சரவைகளில் பணி புரிந்தவர் ஆவார்.

ராஜஸ்தான் மாநிலத்திலும் பிற மாநிலங்களிலும் இவர் மாவட்ட ஆட்சியராக முதலில் பணி புரிந்துள்ளார். தேர்தல் ஆணையத்தில் தற்போது மூத்த அதிகாரியாக சுனில் அரோரா உள்ளார். சுனில் அரோராவுக்கு இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்திய தேர்தல் ஆணையராக பதிவி பிரமாணம் செய்து வைத்தார்.

கார்ட்டூன் கேலரி