இன்று 1700 கடைகள் மூடப்பட்டும் டாஸ்மாக் விற்பனை ரூ.150 கோடியை எட்டியது

சென்னை

ன்று ஒரே நாளில் 1700 கடைகள் மூடப்பட்டும் டாஸ்மாக் விற்பனை ரூ. 150 கோடியை எட்டி உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மூன்றாம் கட்ட ஊரடங்குக்கு இடையில் தமிழகத்தில்  இன்று டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதில் சென்னை உள்ளிட்ட அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் இன்று திறக்கப்படவில்லை.

இவ்வாறு சுமார் 1700 மதுக்கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை.

இதில் சென்னையில் சுமார் 800 மதுக்கடைகளும் மற்ற ஊர்களில் சுமார் 900 கடைகளும் அடங்கும்.

இன்றைய மதுபான விற்பனை  ரூ.150 கோடியை எட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது.

சுமார் 1700 மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தும் இந்த அளவு விற்பனை ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.