பெங்களூரு:

ர்நாடகாவில் இன்று மதசார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி ஏற்கிறது. இதை மக்கள் எதிர்ப்பு தினம் என்று பாரதியஜனதா தெரிவித்து உள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், 104 இடங்களை கொண்ட பாஜவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்து பதவி ஏற்பும் செய்து வைத்தார்.

எதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதி மன்றம் எடியூரப்பாவுக்கு பெரும்பான்மை நிரூபிக்க அதிரடி உத்தரவிட்டது.

இதையடுத்து பெரும்பான்மை நிரூபிக்க முடியாத எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாக சட்ட மன்றத்தில் அறிவித்து விட்டு வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து, மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமியை பதவியை ஏற்க அழைப்பு விடுத்தார். அதன் காரணமாக இன்று பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.

இந்த நிலையில், மதசார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி பதவி ஏற்கும் தினமான இன்று, ‘மக்கள் எதிர்ப்பு தினம்’ என்று கர்நாடக மாநில பாரதியஜனதா அறிவித்து உள்ளது. மக்கள் எங்களுக்கு அதிக அளவில் வாக்குகள் அளித்துஉ ள்ளார்கள் என்றும் கூறி உள்ளது.