திப்பு ஜெயந்தி: 144 தடை – நூற்றுக்கணக்கானோர் கைது! கர்நாடகாவில் பரபரப்பு

சென்னை:

ர்நாடக மாநிலத்தில் திப்பு சுல்தான் பிறந்தநாளை திப்பு ஜெயந்தி என மாநில அரசு கொண்டாடி வருகிறது. இதற்கு பாஜக போன்ற சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன.

இந்த நிலையில், கர்நாடகாவின் சில மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. திப்பு ஜெயந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


கர்நாடகாவில் இன்று  திப்பு ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதை  முன்னிட்டு, கர்நாடகாவின் சில மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் பிறந்த நாளை கர்நாடக மாநில முந்தைய காங்கிரஸ் அரசு , அரசு விழாவாக அறிவித்து  கொண்டாடி வருகிறது.

இதற்கு கர்நாடகாவில் பாஜக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்மாநிலத்தில் பிரச்சணைகள் ஏதும் நடைபெறாமல் இருக்க குடகு, ஹுப்ளி, தார்வாட் ஆகிய மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.‘

சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை பெறும் நோக்கத்தில் மாநில அரசு இந்த விழாவினை நடத்துவதாக பாஜக உள்பட சில கட்சிகள் பல்வேறு அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் காரணமாக திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என முதல்வர் குமாரசாமியும், துணை முதல்வர் பரமேஸ்வராவும்  அறிவித்துள்ளனர்.

திப்பு ஜெயந்திக்கு எதிராக மடிகேரி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மடிகேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் காரணமாக கர்நாடகாவில் பரபரப்பு நிலவி வருகிறது.

கார்ட்டூன் கேலரி