சென்னை

மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று நடத்தும் நான்காம் நிலை ஊழியர்களுக்கான தேர்வை 20.69 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (( டி என் பி எஸ் சி) தேர்வு இன்று நடைபெறுகிறது.    கடந்த வருடம் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளி ஆனது.  மொத்தம் விண்ணப்பித்த 20,83,152 பேரில் 20,69,274 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.   இவர்களில் ஆண்கள் 9,41,878,  பெண்கள் 11,27,342, மூன்றாம் பாலினர் 54,  மாற்றுத்திறனாளிகள், 25,906, ஆதரவற்ற விதவைகள் 7367, முன்னாள் படைவீரர் 4107 பேர் ஆவார்கள்.

நான்காம் நிலை ஊழியர்களான கிராம அலுவலர் – 494 இடம், இளைநிலை உதவியாளர் (பிணை தேவை இல்லாமல்) – 4096,  இளநிலை உதவியாளர் (பிணையுடன்) – 205, வரி வசூலிப்பவர் – 48,  நில அளவ்ர் – 74,  வரைவாளர் – 156,  தட்டச்சர் – 3463 சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் – 815,  உள்ளிட்ட 9361 பணி இடத்தை நிரப்ப இந்த தேர்வு நடைபெறுகிறது.

சென்னையில் 1,60,120 பேர் தேர்வு எழுதுகின்றனர்.    இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.   மொத்தமுள்ள 6962 தேர்வு மையங்களில் சென்னையில் 508 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.   தேர்வு எழுதுபவர்கள் மொபைல்,  கால்குலேட்டர் உட்பட எலெக்ட்ரானிக் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.     தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு ஒரிஜினல் இல்லாதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.