தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு: தலைமைச் செயலாளருடன் எடப்பாடி அவசர ஆலோசனை!

சென்னை:

18 எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க  வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று மதியம் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்த பரபரப்பான நிலையில் ததலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் முதல்வர் பழனிசாமி அவசர அவசரமாக ஆலோசனை நடத்தினார்.

அதுபோல தமிழக தலைமை வழக்கறிஞரும் முதல்வர் மற்றும் தலைமை செயலாளருடன் அவசர ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.