46வது பிறந்த தினம் விஜய்க்கு இயக்குனர், நடிகர், நடிகைகள் வாழ்த்து..

ளபதி நடிகர் விஜய்க்கு இன்று 46வதுபிறந்த தினம். அவரது பிறந்ததினத்தை ரசிகர்கள் இணைய தளத்தில் கொண்டாடி வரும் நிலையில் இன்னொரு புறம் நடிகர், நடிகைகள் வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர்.

Vijay at Puli Audio Launch

நடிகர்கள் ஜீவா, விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, விஷால், விஷ்ணு விஷால், சிபிராஜ், ஆர்யா, ஹரீஷ் கல்யாண், நிதின் சத்யா, பிரசன்னா, இயக்குனர் பாண்டிராஜ், அட்லீ, நடிகைகள் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், மன்ஞ்சிமா மோகன் என நட்சத்திரங்களின் வாழ்த்து பட்டியல் நீள்கிறது.
இயக்குனர்கள் பாண்டிராஜ், அட்லி இருவரும் வாழ்த்துடன், ’உங்களுடன் இணைந்த பணியாற்ற காத்திருக்கிறோம்’ என விருப்பமும் தெரிவித்திருக்கின்றனர். விஜய்க்கு பிறந்த தின வாழ்த்து கூறிய ஏ.ஆர்.முருகதாஸ்,’மகிழ்ச்சியும் அமைதியும் உங்களுக்கு நிலைக்கட்டும்’ என வாழ்த்தியிருக்கிறார்.