டில்லி:

32-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் இன்று  நடைபெறுகிறது. இதில் தமிழகம் சார்பாக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி மாற்றி அமைக்கப்படும் என தெரிகிறது.

நாடு முழுவதும் கடந்த2017ம் ஆண்டு ஜூலை 1ந்தேதி முதல்  ஒரே மாதிரியான வரியான ஜிஎஸ்டியை அமல்படுத்தி உள்ள மத்திய அரசு, வரி விகிதங்களை  5%, 12%, 18%, 28% என நான்கு வகையாக பிரித்து வரி வசூல் நடத்தி வருகிறது.

இந்த வரி விகிதங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக மாநில நிதி அமைச்சர் கள் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில் குழு அமைக்கப்பட்டு, இந்த குழுவினர் மாதந் தோறும் கூடி வரி விகிதங்களில் மாற்றங்கள் குறித்து விவாதித்து நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று  மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில்  32வது ஜிஎஸ்டி கவுன்சிடல் கூட்டம்  டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்று தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள் ளார்.  கூட்டத்தில் பல வகையான பொருட்களின் வரி விகிதங்கள் மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்,  சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி  28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட் 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.