கொரோனா : இன்று கர்நாடகாவில் 1,194 பேர், கேரளா 5711 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி

ன்று கர்நாடகா மாநிலத்தில் 1194,  கேரளா மாநிலத்தில்  5,711 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் இன்று 1194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.இதுவரை 9,09,469 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 5 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதுவரை 12,009 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,062 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 8,82,944 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 14,467 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கர்நாடகா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 5,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 7,05,870 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இன்று 30 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 2817 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,471 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,41,285 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 61,620 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.