டில்லி

ன்று மகாராஷ்டிராவில் 3543, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 357  கேரளாவில் 5,177 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 19,09,914 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 89 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 49,058 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3122 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 18,04,822 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 54,905 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

 

 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,80,075 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,085 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 490 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,69,124 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 3,862 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 5177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 7,26,688 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இன்று 22 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 2915 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,801 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,60,445 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 63,157 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.