சென்னை,
ன்று விடுமுறை தினம் என்பதால் வங்கிகளிலும், ஏடிஎம் இயந்திரங்கள் உள்ள இடங்களிலும் அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
மேலும் ஒருசில இடங்களில் உள்ள ஏடிஎம்-கள் செயல்படாத காரணத்தினால், பணம் வரும் ஏடிஎம் மையங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் கடந்த 10-ஆம் முதல் வங்கிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு மக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன.
atm2
புதிய ருபாய் நோட்டுகளை ஏடிஎம்-களில் நிரப்புவதற்கு ஏதுவாக கடந்த 9, 10 ஆகிய இரண்டு தேதிகளில் நாடெங்கும் உள்ள ஏடிஎம்-கள் செய்லபடவில்லை.
நேற்று முதல் ஏடிஎம்-கள் மீண்டும் தங்களது சேவையை தொடங்கியுள்ளன. ஆனால் தமிழகத்தின் ஒருசில இடங்களில் உள்ள ஏடிஎம்-கள் நேற்றும் செயல்படவிலை. ஒருசில ஏடிஎம்-கள் திறந்திருந்தாலும் பணம் வரவில்லை. இதேநிலை தான் இன்றும் நீடித்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள ஏடிஎம்-களில் மக்கள் தங்களது பணத்தை செலுத்தும் வசதி மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
பணத்தை மக்களால் பெறமுடியவில்லை. இதனால் பணம் வரும் ஏடிஎம் மையங்களில், மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
தங்களது வங்களிலும் பணம் இருந்தும் ஒருசில ஏடிஎம்-கள் செயல்படாத காரணத்தினால் பணம் எடுப்பதற்காக மக்கள் இன்றும் சிரமப்பட்டு தான் வருகின்றனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் அனைத்து வங்கிகளிலும்ம்  மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. நாளையும் இந்த அளவுக்கு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.