Random image

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 1,066 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,10,080 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,024 .பேர் உயிர் இழந்து 7,88,742 பேர் குணம் அடைந்து தற்போது 9,314 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 302 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,23,209 பேர் பாதிக்கப்பட்டு 3,973 பேர் உயிர் இழந்து 2,16,214 பேர் குணம் அடைந்து தற்போது 3,022 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 51,596 பேர் பாதிக்கப்பட்டு 641 பேர் உயிர் இழந்து 49,977 பேர் குணம் அடைந்து தற்போது 978 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 49,486 பேர் பாதிக்கப்பட்டு 736 பேர் உயிர் இழந்து 48,191 பேர் குணம் அடைந்து தற்போது 559 பேர் சிகிச்சையில் உள்ளனர்.