சென்னை

மிழகத்தில்  இன்றைய (21/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 11,681 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,25,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 13,258 பேர் உயிர் இழந்து 9,27,440 பேர் குணம் அடைந்து தற்போது 84,361 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 3,750 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,94,073 பேர் பாதிக்கப்பட்டு 4,450 பேர் உயிர் இழந்து 2,60,367 பேர் குணம் அடைந்து தற்போது 29,256 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 69,563 பேர் பாதிக்கப்பட்டு 709 பேர் உயிர் இழந்து 63,742 பேர் குணம் அடைந்து தற்போது 5,112 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 69,464 பேர் பாதிக்கப்பட்டு 875 பேர் உயிர் இழந்து 60,789 பேர் குணம் அடைந்து தற்போது 7,795 பேர் சிகிச்சையில் உள்ளனர்.