தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 724 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,26,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,222 .பேர் உயிர் இழந்து 8,05,136 பேர் குணம் அடைந்து தற்போது 7,164 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் நேற்று 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,27,800 பேர் பாதிக்கப்பட்டு 4,045 பேர் உயிர் இழந்து 2,21,573 பேர் குணம் அடைந்து தற்போது 2,182 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 53,129 பேர் பாதிக்கப்பட்டு 661 பேர் உயிர் இழந்து 51,764 பேர் குணம் அடைந்து தற்போது 704 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 50,557 பேர் பாதிக்கப்பட்டு 750 பேர் உயிர் இழந்து 49,389 பேர் குணம் அடைந்து தற்போது 418 பேர் சிகிச்சையில் உள்ளனர்.