Random image

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,31,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,272 பேர் உயிர் இழந்து 8,13,326 பேர் குணம் அடைந்து தற்போது 5,725 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,29,238 பேர் பாதிக்கப்பட்டு 4,069 பேர் உயிர் இழந்து 2,23,230 பேர் குணம் அடைந்து தற்போது 1,939 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 53,691 பேர் பாதிக்கப்பட்டு 663 பேர் உயிர் இழந்து 52,433 பேர் குணம் அடைந்து தற்போது 595 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 50,922 பேர் பாதிக்கப்பட்டு 757 பேர் உயிர் இழந்து 49,814 பேர் குணம் அடைந்து தற்போது 351 பேர் சிகிச்சையில் உள்ளனர்.