சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,31,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,281 பேர் உயிர் இழந்து 8,14,098 பேர் குணம் அடைந்து தற்போது 5,487 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,29,386 பேர் பாதிக்கப்பட்டு 4,072 பேர் உயிர் இழந்து 2,23,421 பேர் குணம் அடைந்து தற்போது 1,893 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 53,749 பேர் பாதிக்கப்பட்டு 663 பேர் உயிர் இழந்து 52,531 பேர் குணம் அடைந்து தற்போது 554 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 50,975 பேர் பாதிக்கப்பட்டு 757 பேர் உயிர் இழந்து 49,876 பேர் குணம் அடைந்து தற்போது 342 பேர் சிகிச்சையில் உள்ளனர்.