சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,34,740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,316 பேர் உயிர் இழந்து 8,17,520 பேர் குணம் அடைந்து தற்போது 4,904 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,30,195 பேர் பாதிக்கப்பட்டு 4,085 பேர் உயிர் இழந்து 2,24,417 பேர் குணம் அடைந்து தற்போது 1,693 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 54,021 பேர் பாதிக்கப்பட்டு 668 பேர் உயிர் இழந்து 52,875 பேர் குணம் அடைந்து தற்போது 478 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 51,257 பேர் பாதிக்கப்பட்டு 763 பேர் உயிர் இழந்து 50,102 பேர் குணம் அடைந்து தற்போது 392 பேர் சிகிச்சையில் உள்ளனர்.