சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 793 பேரும் கோவையில் 1,563 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 11,805 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 23,78,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 30,068 பேர் உயிர் இழந்து 22,33,015 பேர் குணம் அடைந்து தற்போது 1,25,215 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 793 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,26,614 பேர் பாதிக்கப்பட்டு 7,876 பேர் உயிர் இழந்து 5,11,274 பேர் குணம் அடைந்து தற்போது 7,464 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்றும் இங்கு 1,563 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்திலும்  இரண்டாம் இடத்தில் 1,270 ஆக ஈரோடு மாவட்டம் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,06,833 பேர் பாதிக்கப்பட்டு 1,778 பேர் உயிர் இழந்து 1,89,606 பேர் குணம் அடைந்து தற்போது 15,449 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,52,257 பேர் பாதிக்கப்பட்டு 2,261 பேர் உயிர் இழந்து 1,46,491 பேர் குணம் அடைந்து தற்போது 3,505 பேர் சிகிச்சையில் உள்ளனர்.