மும்பை: நாட்டின் ஜிடிபி நிலவரம் வெறும் 2020-21 ஆண்டு காலக்கட்டத்தோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல; அதையும் தாண்டிய சில ஆண்டுகளுக்கு கடினமான சூழல்களை இந்தியப் பொருளாதாரம் கடக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார் குமார மங்கலம் பிர்லா.

கொரோனாவுக்குப் பிந்தைய காலத்தில், நுகர்வோரின் இயல்புகள் மற்றும் நிறுவனங்களின் செயல்பாட்டு நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்கிறார் இவர்.

நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான குமாரமங்கலம் பிர்லா, சரக்குப் பண்டங்கள் தொடங்கி, டெலிகாம் மற்றும் நிதிசார் சேவைகள் வரை பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டுள்ளவர்.

தனது நிறுவனப் பங்குதாரர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்த நோய்ப்பரவலால் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த நலிவின் தடங்கள், அடுத்துவரும் ஆண்டுகளிலும் உலகப் பொருளாதாரத்தில், நுகர்வோர் மற்றும் வர்த்தக நம்பிக்கை என்பதன் அடிப்படையில் தாக்கம் செலுத்தும்” என்றுள்ளார்.

விமானப் போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் துறை பழைய நிலைக்கு திரும்புவதற்கு அதிகநேரம் எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.